பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார்.
சிறுத்தை, மதராஸி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மீன் வியாபாரம் செய்ததால் ஃபிஷ் வெங்கட் என அழைக்கப்பட்டார்.
வெங்கட்டின் உடல்நிலை குறித்து தெரிய வந்ததும் ரூ.50 லட்சம் கொடுப்பதாக தெரிவித்தார் நடிகர்பிரபாஸ். விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்த கண்ணப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபாஸ். ஜூன் 27ம் தேதி ரிலீஸான கண்ணப்பா படம் பார்த்த அனைவரும் பிரபாஸின் கதாபாத்திரத்தை பாராட்டினார்கள். சொல்லப் போனால் பிரபாஸ் வந்த பிறகே கண்ணப்பா படம் பரபரக்கிறது என்றார்கள்.
தெலுங்கு திரையுலகின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் வெங்கட் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்த வெங்கட் தற்போது காலமானார் என்ற செய்தி தெலுங்கு சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.