கர்ப்பிணிகளே!… பனிகுட நீர் அபாயங்களை இரட்டிப்பாக்கும் வெப்ப அலை!… என்ன செய்யவேண்டும்?

Heat: இந்திய வானிலை ஆய்வு மையமானது இன்றுமுதல் 20ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக் கூடும் என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான முன்னெற்பாடு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு கோடை காலம் வழக்கத்தை விட மிகவும் அதிகபட்ச வெப்பநிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையமானது வெப்ப அலைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் 20ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஒடிசா கல்வித் துறை ஆனது வெப்ப அலை தாக்கம் மற்றும் பகல் நேரம் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் ஏப்ரல் 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலத்தின் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நாட்டிலேயே அதிகபட்சமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், வெப்ப அலையால் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால், கூடுதல் கவனத்துடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே நீர் குடித்தால் வாந்தி வரும் என்பதால், பல பெண்கள் நீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இதனால், பிரசவிப்பதே பெரும் சிக்கலுக்கு உள்ளாகி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் குழந்தைக்கு தேவையான நீர் இருக்க வேண்டுமென்பதால், கர்ப்பிணிகள் சிரமப்பட்டாவது அடிக்கடி போதிய நீர் குடிக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், மற்றவர்களைப் போலவே இளநீர், பழச்சாறு போன்றவற்றை குடிக்கலாம். அதிக நீர் குடித்து சிறுநீர் கழிக்க வேண்டும்; போதிய அளவு சிறுநீர் போகாமல் விட்டாலும் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெயிலால் திடீர் மயக்கம் ஏற்படும் என்பதால், வெளியில் சென்றால் தனியாக செல்லக்கூடாது. வெயிலால் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Readmore: தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு; களத்தில் 950 வேட்பாளர்கள்

Kokila

Next Post

ஆதார் இருந்தாலே போதும்... Voter ID இல்லாமலேயே வாக்களிக்கலாம்..!

Thu Apr 18 , 2024
வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லையே என்று கவலை கொள்ள வேண்டாம். ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் போதும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு […]

You May Like