மோசமான வானிலை….! ஜனாதிபதியின் குன்னூர் பயணம் திடீர் ரத்து…!

குடியரசு தலைவர் துரோபதி மருமம் 2 நாள் பயணமாக, நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலமாக காலை 11 40 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அதன் பிறகு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு அங்கு சென்று சிவராத்திரி விழாவில் பங்கேற்றுக் கொண்டார்.

ஆகவே குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வதாக முன்னர் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், மோசமான வானிலை நிலவி வருவதால் குடியரசு தலைவர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே முன்னாள் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் இதே வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது காட்டேரி பள்ளம் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதால் அவர் தன்னுடைய குடும்பத்துடன் உயிரிழந்தார் என்பது நினைவு கூறத்தக்கது

கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக காலை 10:30 மணியளவில் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் வருகை தருவதற்கு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டனர். ஆனாலும் குன்னூர் காட்டேரி பள்ளம் பகுதியில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய இயலாது என்பதால் குடியரசுத் தலைவரின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

மறைந்த நடிகர் மயில்சாமி கடைசியாக பேசிய டப்பிங் காட்சி.. வைராகும் வீடியோ..

Sun Feb 19 , 2023
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… தாவணிக் கனவுகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மயில்சாமி, தூள், கில்லி, நான் அவன் இல்லை, தேவதையை கண்டேன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.. குறிப்பாக நடிகர் விவேக் உடன் இணைந்து மயில்சாமி நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலமடைந்தன.. இந்நிலையில் சிவராத்திரியை ஒட்டி, சென்னையை அடுத்த […]

You May Like