தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்..
இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன..
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த 23-ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.
மேலும் தமிழகத்திற்கு இரட்டை என்ஜின் ஆட்சி தேவை என்று கூறினார்.. ஆனால் தமிழகத்தில் இரட்டை என் ஜின் என்ற டப்பா என் ஜின் ஆட்சி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது..” என்று பதிலடி கொடுத்தார்..
இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. வரும் 28-ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..



