கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களான உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே மேக வெடிப்பு காரணமாக திடீரென மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித்தீர்க்கும் மழையால், முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன. ஜம்மு – காஷ்மீரில் கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பஞ்சாபில் வெள்ளம் காரணமாக சட்லஜ், பியாஸ், ரவி ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவில் உள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர், 2.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மண்டி, காங்க்ரா, சிர்மவுர், கின்னோர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஆய்வு செய்யும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
Readmore: 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சிதைந்த பேருந்து !. பறிபோன 15 பயணிகளின் உயிர்!. இலங்கையில் சோகம்!.