”10 ஆண்டுகளில் பிச்சைக்கார நாடாக மாற்றிய பிரதமர் மோடி”..!! சீமான் விளாசல்..!!

”10 ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்காரன் நாடாக மட்டுமே மோடி மாற்றியுள்ளார்” என சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எதிரி கிடையாது சுற்றிலும் எதிரிகள் இருக்கின்றன. காங்கிரஸ், திமுக, பாஜக, அதிமுக ஆகிய நான்கு கட்சிகள் கோட்பாடும் தமிழ் சமூகத்திற்கு எதிரானது.

எதிலும் கலப்படத்தை விரும்பவில்லை மக்கள். ஆனால், உயிருக்கு நிகரான மொழியில் பிற மொழியை கலந்து கலந்து பேசுகிறார்கள். உலகத்தில் எந்த மொழியும் பிற மொழி துணையின்றி வாழும் மொழி தமிழ் மொழி. 5 ஆண்டு போதும், பூமியின் சொர்க்கமாகத் தமிழகத்தினை மாற்றுவோம். 10 ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்காரன் நாடாக மட்டுமே மோடி மாற்றியுள்ளார். மக்கள் மத்தியில் இவ்வுள்ள திட்டம் கொண்டு வந்தேன் என்று மோடி செய்தியாளரைச் சந்திப்பாரா? ஜாதி, மதம் கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களைப்பற்றி சிந்திப்பவன் ஜாதி மதத்தை சிந்திக்க நேரம் இருக்காது.

இன்னொரு முறை பாஜக கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்திய நாட்டை மறந்து விட வேண்டும். 90 சதவீதம் நாடு ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது. அப்போது அதானி, அம்பானி ஆகிய இருவரிடமும் தான் நாடு இருக்கும்” என்று சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More : வாக்காளர்களின் முக்கிய பிரச்சனையை கேட்டு அதிர்ந்துபோன பாஜக..!! கருத்துக் கணிப்பில் ஷாக் ரிப்போர்ட்..!!

Chella

Next Post

”ராணுவ வீரர்களுக்கு பதில் வேறொருவர் வாக்களிக்கலாம்”..!! வெளியான அறிவிப்பு..!!

Thu Apr 11 , 2024
ராணுவம் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் தங்களுக்கு பதில் வெறொருவரை வாக்குச் சாவடிக்கு அனுப்பி ‘பதிலி வாக்கு’ முறையில் வாக்களிக்கும் சலுகை தேர்தலில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், பல்வேறு வகையான சலுகைகளையும் வழங்கி வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இடத்தில் […]

You May Like