தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் பிரதமரின் ஜவுளிப் பூங்கா…! மத்திய அரசு ஒப்புதல்…!

pm modi 1 11zon

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் பிரதமரின் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடைகள் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பிஎம் மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முறையே 1,894 கோடி ரூபாய் மற்றும் 2,063 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீ்ட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடைகள் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பூங்காவுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,197.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுவரை ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகளுக்காக 291.61 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பிஎம் மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முறையே 1,894 கோடி ரூபாய் மற்றும் 2,063 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீ்ட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கைத்தறி துறையை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும், கைத்தறி நெசவாளர்களின் நலன்களுக்காகவும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் விநியோகத் திட்டம் என்ற இரண்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

Vignesh

Next Post

35 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு!. புதிய விலைகளுடன் கூடிய மருந்துகளின் பட்டியல் இதோ!.

Mon Aug 4 , 2025
நோயாளிகளுக்கு மருந்துகளை மலிவு விலையில் வழங்கும் நடவடிக்கையாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), முன்னணி மருந்து நிறுவனங்களால் விற்கப்படும் 35 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலைகளைக் குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்டுள்ள இந்த மருந்துகளில், அழற்சி எதிர்ப்பு, இருதய நோய், ஆண்டிபயாடிக், நீரிழிவு எதிர்ப்பு மற்றும் மனநல மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அடங்கும். NPPA-வின் விலை ஒழுங்குமுறையின் அடிப்படையில், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்த […]
medicines 2025 04 6636252c50538277f54ac700f4ac9b90 16x9 1

You May Like