கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது..
கேமரா, மைக் ஆகியவற்றை பிடுங்கி வைத்துக் கொண்டு நிருபர் மீது கொலை நடத்தப்பட்டுள்ளது.. மேலும் அந்த குவாரியில் இருந்து நிருபர், ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்..
சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.. கிட்டத்தட்ட ஒன்றரை நேரம் கழித்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் உள்ளிட்ட 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் திரு. கதிரவன், ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா? ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..
Read More : பிப்.,5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..!



