சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத தகவல்களை நீக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பாதுகாப்பு, பொறுப்புணர்வு, வெளிப்படை தன்மையை உறுதிசெய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ல் உரிய திருத்தங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திருத்த சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்றுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இச்சட்ட பிரிவு 3(1)(டி)-யின் படி நீதிமன்ற உத்தரவு அல்லது அரசின் அனுமதி பெற்று சட்டவிரோத தகவல்கள் அகற்றப்பட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் சட்டவிரோத தகவல்களை அகற்ற இணை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரம் கொண்ட மூத்த அதிகாரி அல்லது இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளை பொருத்தமட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத சிறப்பு அதிகாரிக்கு மட்டுமே இந்த சட்ட விரோத தகவல்களை அகற்ற அதிகாரம் வழங்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின் சட்டபூர்வ அடிப்படை, அதன் தன்மை மற்றும் மீட்கப்பட வேண்டிய தகவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது.இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளுக்கும், மாநிலத்தின் சட்டப்பூர்வ அதிகாரங்களுக்கும் இடையே சமநிலையை உருவாக்குவதாக அமைந்துள்ளன, மேலும் இந்த திருத்தம் வெளிப்படையான அமலாக்க நடவடிக்கைகளை உறுதி செய்கிறது. தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு வழிவகுக்காது என்பதையும் உறுதிசெய்கிறது.
இதுபோன்ற நடவடிக்ககள் சமூக வலைதளம் மற்றும் ஆன்லைன் நடவடிக்ககள் வெளிப்படையாகவும் சட்டத்திற்குட்பட்டு செயல்படுவதையும் உறுதிசெய்யும் வகையில் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.சமூக வலைதள பாதுகாப்பு தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் மாதாந்திர மதிப்பாய்விற்கு உட்பட்டதாக அமையும்.



