சென்னையில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தலையில் சுமத்தப்பட்ட பேரிடி என்று கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாக நடைமுறையில் இருக்கும் வரியின் மதிப்பீட்டிலிருந்து 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் வரை உயர்த்துவது என்பது வழக்கமானதுதான். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் திடீரென ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற ரீதியில் பெருமளவில் சொத்து வரியை உயர்த்தியிருப்பது சென்னை மக்களுக்கு கடுமையான இன்னல்களையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் தற்போது 100 மடங்கு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பது மட்டுமன்றி, ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் நூற்றுக்கு 300 சதவீதம் வரை வரி உயர்வு விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மக்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொள்ளாமல் அநியாயமான முறையில் விதிக்கப்பட்டுள்ள இந்த அதீத சொத்து வரி உயர்வை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Read More : “நீங்க தான தாய் மாமன்.. பதில் சொல்லுங்க”..! CM விஜய்யை விளாசிய சீமான்..!!



