ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! எல்லை தாண்டியதாக குற்றச்சாட்டு!

6136430 df 1

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு கோரி கோரிக்கை வைத்து வந்தாலும் இந்த பிரச்சினை முடிந்தபாடில்லை.


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே பல மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடி வரும் நிலையில், தற்போது மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவ அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: தரைமட்டத்திற்கு சரிந்த சின்ன வெங்காயம் விலை.. விரக்தியில் விவசாயிகள்..! ஒரு கிலோ இவ்வளவு தானா?

English Summary

10 Rameswaram fishermen arrested.. Sri Lankan Navy atrocities..!

Next Post

மீண்டும் ஹார்முஸ் நீரிணை மூடல்.. ஈரான் அதிரடி முடிவு..! மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..!

Thu Apr 9 , 2026
ஈரான் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழலில், ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் காரணமாக இந்த நீரிணை மூடப்பட்டது. இஸ்ரேலின் நடவடிக்கைளை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது.. ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர்களின் போக்குவரத்தை அது நிறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் […]
iran israel war 1 1 2

You May Like