இந்தியர்களை அச்சுறுத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்!… 2040-க்குள் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்கும்!… ஆய்வில் அதிர்ச்சி!

Prostate cancer: இந்தியாவில் 2040ஆம் ஆண்டுக்குள் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருமடங்காக அதிகரித்து ஆண்டுக்கு சுமார் 71,000 புதிய பாதிப்புகள் இருக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் 33,000 முதல் 42,000 வரை புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. உலகில் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 14 லட்சமாக இருந்த புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் 2040 ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு 29 லட்சமாக இருக்கும். இதையடுத்து, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் புற்றுநோயின் பாதிப்பு அதிகரிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் புற்றுநோயால் கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 3,75,000 இறப்புகள் ஏற்பட்டது. பெரும்பாலான நோயாளிகள் புற்றுநோயின் பாதிப்பு மேம்பட்ட நிலைகளில் தான் கண்டறியப்படுகிறார்கள். இதன் விளைவாக, சுமார் 65 சதவீதம் (18,000-20,000) நோயாளிகள் புற்றுநோயால் இறக்கின்றனர். புற்றுநோயின் பாதிப்பு முன்கூட்டியே தெரிய வந்தால் இறப்புகள் தவிர்க்க இயலும்” இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் புற்றுநோயானது ஆரம்ப நிலைகளில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால், மேம்பட்ட நிலைகளில் மட்டுமே நோயாளிகள் சிறுநீர் கழிப்பதில் சிரமம், எலும்பு வலி, விந்து அல்லது சிறுநீரில் ரத்தம் மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். குறிப்பாக, பலவீனமான சிறுநீர் ஓட்டம் மற்றும் வலி அல்லது சிறுநீரில் ரத்தம் போன்றவை புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நோயாளிகள் மருத்துவர்களை அணுகி ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்”.

Readmore: மக்களவைத் தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்!… மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

Kokila

Next Post

Modi: காங்கிரஸால் போட்டியிட கூட வேட்பாளர்களை கண்டுபிடிக்க முடியல...! பிரதமர் மோடி பேச்சு

Sun Apr 7 , 2024
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் என்றும், இந்த பணியும் நிறைவடைந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அடையாளத்தைக் கொண்டுள்ளது என்றும், அதில் ஒரு பகுதி இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார். சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “பிரிவு 370ஐ ரத்து செய்வது எங்கள் பணி, இந்த பணியும் நிறைவடைந்துள்ளது. காஷ்மீரில் இன்று […]

You May Like