EPFO: 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் வெளியீடு…! முழு விவரம் இதோ…

Epfo Pf Money

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது.


தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 21.04 லட்சம் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் வெளியிடப்படும் பகுப்பாய்வு தரவுகளை 2024 ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும் போது நிகர சம்பள பட்டியல் உறுப்பினர்கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் தொடர் முயற்சிகள், வலுவான கூடுதல் வேலைவாய்ப்புகள் மற்றும் பணியாளர் நலன் குறித்த விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்துள்ளது.

2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ள சம்பள பட்டியலில் உள்ள தரவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

புதிய சந்தாதாரர்கள்:

2025 ஜூலை மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 9.79 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகள், தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் வெற்றிகரமான திட்டங்கள் ஆகியவை இதற்கு காரணமாகும். சம்பள பட்டியலில் 18-25 வயதுக்கு உட்பட்டவர்கள் முன்னணியில் உள்ளனர். இந்தப் பிரிவில் 5.98 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது 2025 ஜூலை மாதத்தில் சேர்க்கப்பட்ட புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 61.06 சதவீதம் ஆகும்.

மாநிலம் வாரியான பங்களிப்பு:

மாநிலம் வாரியாக சம்பள பகுப்பாய்வு பட்டியலில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 60.85 சதவீத புதிய உறுப்பினர் சேர்க்கை பங்களிப்பை கொண்டுள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலம் 20.47 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை பங்களிப்பை பெற்று முன்னணியில் உள்ளது.கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, புதுதில்லி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஜூலை மாதத்தில் 5 சதவீதத்துக்கும் அதிக உறுப்பினர் சேர்க்கையை கொண்டுள்ளன.

Vignesh

Next Post

பாகிஸ்தானில் பெரும் குண்டுவெடிப்பு!. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீண்டும் குறிவைப்பு!. ரயில் தடம் புரண்டதில் பலர் காயம்!.

Wed Sep 24 , 2025
பாகிஸ்தான் மற்றொரு பெரிய பயங்கரவாத தாக்குதலைப் பதிவு செய்துள்ளது. பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தின் டாஷ்ட் பகுதியில் திங்கள்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. பல பெட்டிகள் கவிழ்ந்தன, குறைந்தது மூன்று பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. குண்டுவெடிப்பு நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. முன்னதாக, அதே ரயில் பாதையை சுத்தம் செய்யும் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெடிகுண்டு தாக்கிய சில மணி நேரங்களுக்குப் […]
Jaffer Express pakistan

You May Like