முக்கிய அறிவிப்பு..! ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…!

school 2025 2

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்றளவில் 4 சுற்றுகளாக ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி அனுமதி வழங்கப்படாது. மாறாக, தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். வழிகாட்டுதல்களின்படி தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: நடிகர் கிருஷ்ணாவின் Whatsapp குழுவில் இருந்தவர்கள் யார்..? போலீஸ் கையில் லிஸ்ட்.. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்..!!

Vignesh

Next Post

சூப்பர் திட்டம்..! நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம் பெற விண்ணப்பிக்கலாம்...!

Sat Jun 28 , 2025
சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு திறமையும் ஆர்வமும் உள்ள 10 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள பயனாளிகள் […]
money subsidy2025

You May Like