புதினின் அச்சுறுத்தல் பேச்சு; அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்பட போவதில்லை… அமெரிக்கா அறிவிப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது;- ரஷிய அதிபர் புதினின் பொறுப்பற்ற பேச்சு மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதை சார்ந்த நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதன் அறிகுறியாகும்.


அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அந்த தவறில் இருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு தொடர்ந்து நாங்கள் ராணுவ தளவாடங்களை வழங்குவோம். “நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா எங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக இருக்கிறது.

எனவே மிஸ்டர் புதின், நான் சொல்வதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம் என்றார்.

1newsnationuser5

Next Post

இதெல்லாம் நமக்கு தேவையா : முத்தம் கொடுக்க வந்தவரின் உதட்டை பதம்பார்த்த பாம்பு….

Sat Oct 1 , 2022
கர்நாடகாவில் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற  நபரின் உதட்டை கொத்திய பாம்பு புதருக்குள் மறைந்தது. கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பத்ராவதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு நுழைந்துவிட்டது.இதனால் பாம்புபிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதிக்கு வந்த அலெக்ஸ் என்ற பாம்பு பிடி இளைஞர் பாம்பை பிடித்தார். பின்னர் அனைவர் முன்பும கெத்துகாட்ட நினைத்தார். அதற்கு முத்தம் கொடுப்பது போல வீடியோ எடுக்க முயன்றார். தனது வாயை […]
snake kiss

You May Like