தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளார்.. தனது கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் கூறியுள்ள அவர் திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விஜய் திமுகவை சாடினார்.. 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.. குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு மாற்று தவெக என்றும் கூறி வருகிறார்.. மேலும் தவெகவை பார்த்து திமுக பயப்படுவதாகவும் கூறினார்..
இந்த நிலையில் அமைச்சர் கே.என். நேரு இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம் தவெகவை பார்த்து திமுக பயப்படுவதாக விஜய் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு வேறு ஏதாவது கேள்விகளை கேட்கும்படி கே.என்.நேரு கூறினார்..
மேலும் 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளரவில்லை என்று விஜய் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த கே.என். நேரு “ கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் திருச்சிக்கு 35000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் வந்திருப்பதாக திருச்சி முன்னாள் ஆட்சியர் பிரதீப் குமார் சொன்னார்.. திருச்சி வளரவில்லை என்று திருச்சியில் இருப்பவர்கள் சொன்னால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.. மற்றவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.. நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.. நல்ல பணிகளை செய்திருக்கிறோம்..
முதல்வர் அவர்கள் முதல்வர் அவர்கள் திருச்சி மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பல நல்லத்திட்டங்களை செய்திருக்கிறார்.. 2026 தேர்தலில் திமுக மீண்டும் ஜெயிக்கும்.. கழகம் 7வது முறையும், தமிழக முதல்வராக ஸ்டாலின் 2வது முறையும் வருவார். டெல்டா மாவட்டங்கள் அதிகமான தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்…” என்று கூறினார்..
அப்போது செய்தியாளர்கள் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள், திமுகவை மட்டும் விமர்சிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு “ காய்ந்த மரத்தில் தான் கல்லடி படும்.. மொட்டை மரத்தில் எப்படி கல்லடி படும்” என்ற பழமொழியை கூறி பதிலடி கொடுத்தார்..
Read More : Breaking : பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. ஆவின் பொருட்களின் விலை குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?