இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.. அப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து பேசிய அவர், “சீனப் படைகள் நமது வீரர்களைத் தாக்குகின்றன, அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய மற்றும் சீன ராணுவ மோதல் குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது..
ராகுல் காந்தி மீது முன்னாள் எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா அவதூறு புகாரளித்திருந்தார். அவரின் புகாரில், சீன ராணுவம் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய வீரர்களை “தாக்குகிறது” என்றும், இந்திய பத்திரிகைகள் அதை கேள்வி கேட்காது என்றும் காந்தி மிகவும் இழிவான முறையில் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை, லக்னோவில் உள்ள எம்.பி-எம்.எல்.ஏ சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் அலோக் வர்மா முன் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார், வழக்கின் கடைசி ஐந்து விசாரணைகளின் போது ஆஜராகாமல் இருந்த நிலையில் அவர் இன்று ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து, ராகுல்காந்தியின் வழக்கறிஞர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி நிரபராதி என்றும் அவருக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் பிரன்ஷு அகர்வால் வாதிட்டார்.
இருப்பினும், காந்தியின் கருத்துக்கள் இந்திய ராணுவத்தின் கண்ணியத்தையும் மரியாதையையும் புண்படுத்துவதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தை வலியுறுத்துவதாகவும் புகார்தாரரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராகுல் காந்தி ஜாமீன் வழங்க்கி உத்தரவிட்டார்.. மேலும் ரூ.20,000 தனிப்பட்ட பத்திரம் மற்றும் அதே தொகைக்கு இரண்டு உத்தரவாதப் பத்திரங்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More : BREAKING| ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு..!!