மகாராஷ்டிர தேர்தலில் மேட்ச் பிக்ஸிக் நடந்ததாக ராகுல்காந்தி கூறிய நிலையில் ஃபட்னாவிஸ் அதற்கு பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிர தேர்தலில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக கூறிய ராகுல்காந்தியை, அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல்காந்தி உண்மையை திரித்து கூறுவதாக குற்றம்சாட்டிய அவர், மக்களின் தீர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக தெரிவித்தார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி இப்போது மக்களின் முடிவை நிராகரித்து வருவதாக ஃபட்னாவிஸ் விமர்சித்தார். ராகுலின் இந்த குற்றச்சாட்டுகள், மகாராஷ்டிர குடிமக்களுக்கு அவமானம் என்று கூறிய அவர், தானும் மக்களும் அத்தகைய கூற்றுக்களை மன்னிக்க மாட்டார்கள் என்று கண்டித்தார்..
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ராகுல்காந்தியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தலையங்கத்தில் வெளியான ராகுல் காந்தியின் கட்டுரையை புறக்கணிக்க வேண்டும் என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார். ஏனெனில் அவரின் கட்டுரை உண்மையை கூறுவதற்கு பதில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். ராகுல்காந்தி காந்தி ஒரு பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“போலி வாக்காளர்கள்” பற்றிய ராகுல் காந்தியின் கூற்றுகளுக்கு பதிலளித்த பட்னாவிஸ், இளம் வாக்காளர்களின் அதிகரிப்பு கடந்த கால போக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று விளக்கினார். 26 லட்சத்திற்கும் அதிகமான இளம் வாக்காளர்களைக் காட்டும் தரவுகளையும் அவர் வழங்கினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் விரிவான கடிதத்தை ராகுல்காந்தி படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2024 இல் வாக்காளர் எண்ணிக்கையில் அசாதாரணமான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை என்றும் ஃபட்னாவிஸ் விளக்கமளித்தார். கடைசி நேரத்தில் அதிக வாக்காளர் எண்ணிக்கை என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்ற ராகுல்காந்தியின் கூற்றுகள் நகைப்புக்குரியது என்றும் ஃபட்னாவிஸ் நிராகரித்தார்.
அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எப்படி பயனளித்தது என்பதற்கான உதாரணங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ராகுல்காந்தி மீது ஆதாரங்களை மறைப்பதுடன் பொது நம்பிக்கைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் ஃபட்னாவிஸ் குற்றச்சாட்டினார்.
ஷிண்டே மற்றும் நட்டா பதில்
மகாராஷ்டிரா தேர்தலில் மகாயுதி கூட்டணியின் வெற்றியை முன்னிலைப்படுத்தி ராகுல் காந்தியின் கூற்றுகளுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மகாராஷ்டிரா வழியாக காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை சென்ற போதிலும், மக்கள் அவரை ஆதரிக்கவில்லை என்று ஷிண்டே குறிப்பிட்டார்.
தேர்தல் தோல்வியால் விரக்தியில் இருக்கும் ராகுல் காந்தி போலி கதைகளை உருவாக்கியதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ மகாராஷ்டிராவைப் பற்றி ராகுல் காந்தி எப்படி பொய் சொன்னார் என்பதை நட்டா விவரித்தார். தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, காந்தி சதித்திட்டங்களை உருவாக்கி, ஆதாரங்கள் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை அவதூறு செய்கிறார் என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்றும் ஜனநாயக ஆட்சிக்கு ஏற்பட்ட அவமரியாதை என்று தேர்தல் ஆணையம் கூறியது. இந்தியத் தேர்தல்கள், சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன என்றும், தேர்தல் நடைபெறும் அளவு மற்றும் துல்லியத்திற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்த தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது அனைத்து மட்டங்களிலும் வேட்பாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை ஆணையம் எடுத்துக்காட்டியது. தவறான தகவல்களைப் பரப்புவது சட்டத்தை அவமதிப்பதாகவும், தேர்தல்களின் போது விடாமுயற்சியுடன் பணிபுரியும் தேர்தல் ஊழியர்களை தாழ்த்துவதாகவும் அது கூறியது.
சாதகமற்ற தீர்ப்புகளுக்குப் பிறகு தேர்தலை அவதூறு செய்வது அபத்தமானது என்றும், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
Read More : UPI பரிவர்த்தனை!. நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதி!. என்னென்ன தெரியுமா?