தென் தமிழகம் & டெல்டா மாவட்டங்களில் இன்று மழை…! வானிலை மையம் தந்த எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் இன்று மற்றும், நாளை 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 15, 16 தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் 18, 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் மலைப்பகுதியில் அதிகபட்சமாக ஊட்டியில் 7 டிகிரி, கொடைக்கானல், குன்னூரில் தலா 9 டிகிரி, ஏற்காட்டில் 10 டிகிரி, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்சமாக திருத்தணியில் 16 டிகிரி, வேலூர், தருமபுரியில் 17 டிகிரி, புதுச்சேரி, சேலத்தில் தலா 19 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மாமல்லபுரம், கோவையில் தலா 20 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

போலியான வரி விலக்கு கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை...!

Sun Dec 14 , 2025
போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம். வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளது. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட […]
income

You May Like