Rain | தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!! 26ஆம் தேதி வரை மழை..!! வானிலை மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், வரும் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வரும் 22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலையை பொறுத்தவரை இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Car | வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை..!! சொந்த கார் + வாடகை வாகனங்கள்..!! மீறினால் நடவடிக்கை..!!

Chella

Next Post

சேப்பாக்கத்தில் IPL கிரிக்கெட்..!! மார்ச் 22, 26ஆம் தேதிகளில் அதிரடி மாற்றம்..!!

Thu Mar 21 , 2024
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதேபோல், 26ஆம் தேதி சென்னை அணி குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டிகளை முன்னிட்டு, போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22 மற்றும் 26ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, […]

You May Like