தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ ஆகிய பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. மேலும்‌, வரும் ஜூன்‌ 6 மற்றும்‌ 7-ம்‌ தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்‌கூடும்‌. அதிகபட்ச வெப்ப நிலையாக 41 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்க பழைய மொபைல் போனை விற்க போறீங்களா?... விலையை அதிகரிக்கும் விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

Sun Jun 4 , 2023
பழைய மொபைல் போனின் விற்பனை விலையை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். நவீன தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் என்பது பெருமளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன்படி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அதிலும் பலருக்கு புதிய மொபைல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.அதில் சிலர் புதிய மொபைல்களை முழுப்பணமும் கொடுத்து வாங்கி விடுகின்றனர். மேலும், சிலர் தான் வைத்திருக்கும் […]
மக்களே உஷார்..!! பழுது நீக்குவதற்காக சிம் கார்டுடன் செல்போனை கொடுத்த நபர்..!! ரூ.2 லட்சம் அபேஸ்..!!

You May Like