தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை…! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா…?

Thunder Rain 2025

கோவை உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்காள வங்கதேச கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 31 முதல் 04-06-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வடக்கு-மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், இதர வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More: 2026 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தனது அறிக்கை…! 7-வது மாநில நிதி ஆணைய குழு அமைத்த தமிழக அரசு…!

Vignesh

Next Post

கோதுமை மாவில் சீக்கிரம் வண்டு, பூச்சிகள் விழுந்துவிடுகிறதா?. தடுக்க சூப்பர் டிப்ஸ்!

Fri May 30 , 2025
கோதுமை மாவை கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது. காரணம் சுவையும் சற்று வித்தியாசமாக இருக்கும், விலையும் அதிகம். இதனால் பலர் கோதுமையை வாங்கி அதை நன்கு சுத்தம் செய்து, காய வைத்து பிறகு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். பின் தேவைப்படும்போதெல்லாம் அதை பயன்படுத்துவார்கள். பொதுவாக அரைக்கும் வெள்ளை மாவுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். ஆனால் கோதுமை மாவு அப்படி […]
flour insects 11zon

You May Like