அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 8 யானைகள் உயிரிழந்தன.
இன்று அதிகாலை அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் சைராங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.. ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதில் 8 யானைகள் உயிரிழந்தன மற்றும் ஒரு யானை காயமடைந்தது. இந்தச் சம்பவம் ஹோஜாயின் சாங்ஜுராய் பகுதியில் அதிகாலை 2.17 மணியளவில் நிகழ்ந்தது.
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே (NFR) செய்தித் தொடர்பாளர் பேசிய போது “ மிசோரம் மாநிலத்தின் சைராங்கை டெல்லியின் ஆனந்த் விஹார் முனையத்துடன் இணைக்கும் அந்த ரயிலின் 5 பெட்டிகளும் எஞ்சினும் தடம் புரண்டன, ஆனால் எந்தப் பயணியும் காயமடையவில்லை. மாநிலத் தலைநகர் குவஹாத்தியிலிருந்து சுமார் 126 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த விபத்து நடந்த இடத்திற்கு வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் வந்துள்ளனர், மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட ஜமுனாமுக் காம்பூர் பிரிவு வழியாகச் செல்லவிருந்த ரயில்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது..” என்று தெரிவித்தார்.
Read More : புர்ஜ் கலிஃபாவை தாக்கிய மின்னல்..! அரிய தருணத்தை படம் பிடித்த துபாய் பட்டத்து இளவரசர்..! வீடியோவை பாருங்க..!



