அதிமுகவில் ஐக்கியமான அருந்ததியர் பேரவை செயலாளர் ராமசாமி IAS..!! கொங்கு மண்டலத்தில் அதிகமாம்..!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். மேலும், தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், அமமுக அருந்ததியர் பேரவையின் மாநிலச் செயலாளருமான இ.ராமசாமி IAS, நேற்றிரவு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமூகத்தின் வாக்கு அதிகளவில் உள்ளது. கடந்த சில தேர்தல்களில் திமுகவுக்கே அவர்களின் வாக்குகள் சென்றன. இதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, அந்த சமூகத்தின் முக்கிய தலைவர்களை இணைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Read More : Abortion | ’கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை உள்ளது’..!! அதிரடியாக நிறைவேறிய சட்ட மசோதா..!!

Chella

Next Post

Vadivelu | திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் வடிவேலு..? எந்த தொகுதி..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Tue Mar 5 , 2024
நடிகர் வடிவேலுவுக்கு திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத சக்தி என்றால் அது வடிவேலு தான். வாழ்வில் எந்த சூழலிலும் வடிவேலுவின் காமெடி பொருத்தமானதாக அமைந்திருக்கும். அவர் திரை உலகில் தீவிரமாக தற்போது காணப்படவில்லை என்றாலும் அவரது மீம்ஸ்கள் தான் எல்லா சூழலுக்கும் பொருத்தமானதாக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது […]

You May Like