முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் வரும் 12ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடக்கி வைக்கிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 16,73,333 குடும்ப அட்டைகளில் 21,70,454 பேர் இந்த திட்டத்தில் பயன்பெறுவர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.