11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு…!

School Exam 2025

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது.

அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள்!. அவசர நிலை பிரகடனத்தை எதிர்கொண்ட இந்தியா!. இருளில் மூழ்கிய தேசம்!. பின்னணி இதோ!

Vignesh

Next Post

சோகம்!. தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!. மண்ணுக்குள் புதைந்த 11 தொழிலாளர்கள் பலி!. சூடானில் தொடரும் அவலம்!

Mon Jun 30 , 2025
ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும். இந்தநிலையில், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் […]
sudan gold mine collapse 11zon

You May Like