தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள இருபோக சாகுபடிப் பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காகவும், அதேபோன்று தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பெரியாறு அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பாசனத்திற்கு வினாடிக்கு 200 கனஅடியும், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 150 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 350 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்படவுள்ளது.
இந்த நீர் திறப்பு மூலம் உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடிப் பாசன வசதியைப் பெறவுள்ளன. அடுத்த 120 நாட்களுக்கு தேவைக்கேற்பவும், நீர் வரத்து மற்றும் இருப்பை பொறுத்தும் மொத்தம் 3,629 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீரைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Read More : “அவமானத்தை நான் தாங்கிக் கொள்கிறேன்”..!! உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!



