இஸ்ரேஸ் தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள், மேலும் முக்கிய அணுசக்தி மையமான நட்டன்ஸ், இஸ்பகான் உள்பட பல அணுசக்தி மையங்கள் தகர்க்கப்பட்டன. 200-க்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்திய இந்த நாசகார தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர். 320 பேர் காயமடைந்ததாக ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளபதிகள் பலரும் அடங்குவர். குறிப்பாக ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி உள்பட பல தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, இன்று காலை வரை ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேர் காயமடைந்தனர். மேலும் ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் எண்ணெய் உற்பத்தியை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
விளைவுகள்: உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றான ஈரானின் எண்ணெய் கிடங்குகள் எரிந்திருப்பது, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை ஏறத்தாழ 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இவ்விளைச்சல், ஏற்கனவே ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உலக எரிசக்தி சந்தைக்கு புதிதாக ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஈரானுக்கு இது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பாக அமையும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். எண்ணெய் ஏற்றுமதியை மூல வருவாயாக வைத்துள்ள ஈரான், தற்காலிகமாக வருமான இழப்பை சந்திக்க நேரிடும். அதேசமயம், இவ்வெடிப்பு காரணமாக உயிரிழப்புகள், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மக்கள் இடம்பெயர்வும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
Read more: திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்: பொது செயலாளர் துரைமுருகன் திடீர் உத்தரவு..!!