இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கச்சந்திரா சிங் இன்று புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.. கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்நாத் மருத்துவமனையில் கநான்காம் கட்ட கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
கடைசி நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரை மெக்கானிக்கல் வென்டிலேட்டர் ஆதரவுடன் வைத்திருந்தனர். மேலும், உடலை நிலைநிறுத்த தொடர்ந்து சிறுநீரக மாற்று சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. நிலைமை வேகமாக மோசமடைந்ததால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில் உயிரிழந்தார்.
டி20 உலகக்கோப்பை முகாமில் இருந்த ரிங்கு
இந்த துயரமான செய்தி, ரிங்கு சிங் இந்திய அணியுடன் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்காக இருந்த நேரத்தில் வெளிவந்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருந்த ஆட்டத்திற்கு முன், தந்தையின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்ததாக தகவல் வந்ததும், அவர் உடனடியாக அணியிலிருந்து விலகி வீட்டிற்கு புறப்பட்டார்.
கச்சந்திர சிங் சில காலமாக கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்தார். ஆனால் சமீப நாட்களில் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து, அவர் கிரேட்டர் நொய்டாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ரிங்கு நீக்கம்
தந்தையை சந்திக்கச் சென்ற குறுகிய பயணத்துக்குப் பிறகு, ரிங்கு மீண்டும் சென்னைக்கு திரும்பினார். ஆனால், அணி மாற்றப்பட்டதால், ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தின் பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்படவில்லை. சூர்யகுமார் யாதவ்v தலைமையிலான இந்திய அணி இரண்டு மாற்றங்களைச் செய்தது.
அணியின் தேவைக்கேற்ப, தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் மீண்டும் சேர்க்கப்பட்டார். மேலும், வலதுகை பேட்ஸ்மேன் தேவையிருந்ததால், இஷான் கிஷான் மூன்றாவது டத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், திலக் வர்மாவின் பங்கு ‘பினிஷர்’ ஆக மாற்றப்பட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார்.
ரிங்கு தொடரில் விளையாடுவாரா?
டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ரிங்கு சிங் விளையாடுவாரா என்பது குறித்து தற்போது தெளிவான தகவல் இல்லை. இந்த விஷயத்தில் பிசிசிஐ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வரும் நேரங்களில் மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்திய அணி அடுத்த முக்கிய போட்டிக்காக கொல்கத்தாவுக்கு பயணம் செய்ய உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த முக்கிய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : வங்கியில் நகை அடகு வைக்கப் போறீங்களா..? ரூ.5,000 இழப்பீடு தொகை பற்றி உங்களுக்கு தெரியுமா..?



