இந்திய ரயில்வேயின் ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை.. ரூ.42,478 சம்பளம்..! உடனே விண்ணப்பிங்க..

job 2

இந்திய ரயில்வே கீழ் இயங்கும் ரைட்ஸ் நிறுவனத்தில் (RITES) ஒப்பந்த அடிப்படையில் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மேனேஜர் பதவியில் 400 காலிப்பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பம் தொடங்கியுள்ளது.


பணியிட விவரம்:

  • சிவில் – 120
  • எலெக்ட்ரிக்கல் – 55
  • சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேஷன் – 10
  • மெக்கானிக்கல் – 150
  • உலோகவியல் – 26
  • கெமிக்கல் – 11
  • ஐடி – 14
  • உணவு தொழில்நுட்பம் – 12
  • பார்மா – 2

வயது வரம்பு: உதவி மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

சிவில் பிரிவு: சிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

எலெக்ட்ரிக்கல் பிரிவு: எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ மின்சாரம் வழங்கல்/ கருவிமயமாக்கல் மற்றும் கட்டுப்பாடு/ தொழில்துறை எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ரூமெண்டேஷன்/ டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ்/ பவர் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேஷன் பிரிவு: எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ பவர் சப்ளே/ இன்ரூமெண்டேஷன்/ டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் உள்லிட்டவற்றில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

மெக்கானிக்கல்: மெக்கானிக்கல் பிரிவிற்கு மெக்கனிக்கல்/ உற்பத்தி/ ஆட்டோமொபைல் உள்ளிட்டவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

உலோகவியல்: பொறியியல் டிகிரி மற்றும் கெமிக்கல் பிரிவிற்கு கெமிக்கல்/ பெட்ரோகெமிக்கல் ஆகியவற்றில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

ஐடி பிரிவு: கணினி அறிவியல் சார்ந்தவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு தேவை.

உணவு தொழில்நுட்பம்: அதற்கான வேளாண்மை, உணவு பேங்கிக் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.

பார்மா: பார்மா பிரிவிற்கு பார்மசி ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கலாம். மேலும் இப்பணியிடங்களுக்கு அந்தந்த துறைகளில் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: உதவி மேனேஜர் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.23,340 ஆகும். மாத சிடிசி ரூ.42,478 ஆகும். ஒரு வருடத்திற்கு ரூ.5,09,741 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 125 கேள்விகளுடன் நடைபெறும். இதில் நெகட்டிங் மதிப்பெண்கள் கிடையாது. இதில் தேர்வாகும் நாபர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இறுதியான தேர்வாகும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://www.rites.com/Career என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.12.2025.

Read more: மறந்தும் கூட இந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!!

English Summary

RITES has issued a notification to fill vacancies in various departments.

Next Post

முதுநிலை ஆசிரியர் தேர்வில் அதிர்ச்சி..!! தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி..!! 20 மதிப்பெண் கூட வாங்கல..!!

Sun Nov 30 , 2025
தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய 1,996 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 2.36 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினர். நேற்று (நவம்பர் 29) வெளியான தேர்வு முடிவுகள், தமிழகக் கல்வித் தரம் குறித்துக் கவலையளிக்கும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளன. தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் சேரும் நபர்களுக்குத் […]
trb teachers recruitment board e1764485547423

You May Like