ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில் விதைத் தொகுப்பு மற்றும் புல்கடணைகள் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1.00 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதை தொகுப்பு மற்றும் புல்கறணைகள் பெறும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியின விவசாயிகளாக இருக்க வேண்டும்.
பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினராக இருக்க வேண்டும். அவர்களுக்கு விதை தொகுப்பு, புல்கறணைகளுடன் தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி மற்றும் கையேடுகள், கள பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினமாக ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானிய தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாள கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தீவன விதைகள் ஆவின் நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு ஆதிதராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கிட அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேலே குறிப்பிடட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
Read more: பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!