மத்திய அரசின் ரயில்வேத் துறையின் கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல்துறை சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது பொறியாளர்களுக்கான பணியிடங்களை நேர்காணல் அடிப்படையில் நிரப்ப உள்ளது.
பணியிட விவரம்:
QA/QC நிபுணர் – 12
மெக்கானிக்கல் பொறியாளர் – 1
எலெக்ட்ரிக்கல் பொறியாளர் – 1
ஒப்பந்த மேனேஜ்மெண்ட் நிபுணர் – 1
உதவி சிவில் பொறியாளர் – 12
டெல்லி NCR/ குர்கான் பணியிடங்கள்
செக்ஸன் பொறியாளர் (S&T, எலெக்ட்ரிக்கல், சிவில்) – 4
Planning & Procurement பொறியாளர் – 2
Drawing, Design பொறியாளர் – 2
QS, Billing பொறியாளர் – 1
டிசைன் பொறியாளர் – 1
உதவி சுற்றுச்சூழல் நிபுணர் – 1
வயது வரம்பு: ஒப்பந்த முறையில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 55 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
- சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் அல்லது சுற்றுச்சூழல் பொறியியல் தொடர்புடைய இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ.
- பதவிக்கு ஏற்ப அனுபவம் அவசியம்.
சம்பளம்:
* QA/QC நிபுணர், மெக்கானிக்கல் பொறியாளர், எலெக்ட்ரிக்கல் பொறியாளர், ஒப்பந்த மேனேஜ்மெண்ட் நிபுணர் – ₹30,000 முதல் ₹1,20,000 வரை
* உதவி சிவில் பொறியாளர் – ₹50,721 மாதத்திற்கு
டெல்லி NCR / குர்கான் திட்ட பணியிடங்கள்:
* பட்டதாரிகள் – ₹24,761 முதல் ₹35,304 வரை
* டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் – ₹18,940 முதல் ₹24,712 வரை
* சம்பளம் அனுபவத்தின் அடிப்படையில் மாற்றப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். குர்கான் மற்றும் குஜராத் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும். ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து, நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் பொறியாளர்கள் https://www.rites.com/ என்ற இணையதளத்தில் விரும்பும் பதவிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
குஜராத்:
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.10.2025
- நேர்காணல் அட்மிட் கார்டு: 10.10.2025
- நேர்காணல் தேதி: 13.10.2025 – 16.10.2025
டெல்லி:
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.10.2025
- நேர்காணல் தேதி: 08.10.2025 – 10.10.2025.