“தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு” மூலம் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை…!

School Money 2025

தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நடப்பாண்டுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 11-ல் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Vignesh

Next Post

மாணவர்களே..!! காலாண்டு தேர்வு தேதி வந்தாச்சு..!! இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Wed Sep 3 , 2025
2025-26ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை, இலக்கியத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா, மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வாக காலாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் அடிப்படையாகக் கொண்டு, […]
School Exam 2025

You May Like