“RSS அமைப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவளிக்கும்…” ஹைதராபாத் பிரச்சாரக் கூட்டத்தில் மோகன் பகவத் உறுதி.!!

RSS: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த முதல் இரண்டு கட்ட தேர்தலில் 190 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கிறது. கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை கேரளா கர்நாடகா உட்பட 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி நடைபெற இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகளுடன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து இருக்கிறது.

தெலுங்கானாவில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத் ஆர்எஸ்எஸ்(RSS) அமைப்பு இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் ஆர்எஸ்எஸ் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது என்பது போன்ற வீடியோக்கள் பொய்யாக பரப்பப்படுகின்றன. அவை முற்றிலும் போலியானது ஆர்எஸ்எஸ் உண்மையாகவே இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Read More: AAM ADMI | “பாஜக-விற்கு துணை போகும் தேர்தல் ஆணையம்…” ஆம் ஆத்மி அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு.!!

Next Post

எச்சரிக்கை.!! Vitamin D குறைபாட்டால் அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்.!! இயற்கை முறையில் தவிர்ப்பது எப்படி.?

Sun Apr 28 , 2024
Vitamin D: உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகவும் பொதுவான ஊட்டச்சத்து பற்றாக்குறைகளில் ஒன்று வைட்டமின் டி குறைபாடு ஆகும். இது பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கருமையான சருமம் உள்ளவர்களையும் பாதிக்கிறது ஆனால் யாருக்கும் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி(Vitamin D) குறைபாடு உலக மக்கள் தொகையில் 13 சதவீதத்தை பாதிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய முக்கியமான ஒரு சத்தாகும். உடலின் சீரான […]

You May Like