உலகின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதி யார்?… எலான் மஸ்க்-ஐ விட பெரிய கோடீஸ்வரர்…

எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் முகேஷ் அம்பானி, ஆகியோரை விட அதிக பணக்காரர் என்று கூறப்படும் உலகின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதி யார் என்று உங்களுக்கு தெரியுமா?

உலகப் பணக்காரர்கள் என்றாலே எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற கோடீஸ்வரர்களின் பெயர்கள் நம் நினைவுக்கு வரும்.. இந்தியாவை பொறுத்தவரை, முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ஷிவ் நாடார் உள்ளிட்டோர் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஆனால், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் முகேஷ் அம்பானி, ஆகியோரை விட அதிக பணக்காரர் என்று கூறப்படும் உலகின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதி யார் என்று உங்களுக்கு தெரியுமா?  அவர் வேறுயாருமில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தான். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,71,877 கோடி ஆகும்.

விளாடிமிர் புடினின் அதிகாரப்பூர்வமாக ஆண்டு சம்பளம் $140,000 (ரூ 1 கோடிக்கு மேல்) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் வாழும் ஆடம்பர வாழ்க்கையை வைத்து பார்த்தால் அவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புடினின் ஆடம்பரமான செல்வத்திற்கு ஒரு சான்று கருங்கடல் மாளிகை. இந்த ஆடம்பர மாளிகையை தவிர புடினுக்கு 19 வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் 716 மில்லியன் டாலர் விமானம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷெஹராசாட் என்ற படகும் புடினிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

புடின் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை விரும்பி சேகரிப்பார் என்றும், அவரின் கைக்கடிகார சேகரிப்பில் 60,000 டாலர் மதிப்புள்ள Patek Philippe Perpetual Calendar மற்றும் $500,000 மதிப்புள்ள A. Lange & Sohne Tourbograph ஆகியவையும் அடங்கும். இந்த இரண்டு கைக்கடிகாரங்களும் அவரது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வருடாந்திர சம்பளத்தை விட அதிகம்.

ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு மிக நீண்ட காலம் ரஷ்ய அதிபராக பதவி வகித்த தலைவர் விளாடிமிர் புடின் 1999 முதல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். இதற்கு முன்பு, அவர் 16 ஆண்டுகள் KGB வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

பகீர்.! ISIS தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற ஐஐடி மாணவர்.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

Sun Mar 24 , 2024
ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் சேரப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துவிட்டு ஐஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போன நான்காம் ஆண்டு பயோ டெக்னாலஜி மாணவரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியத் தலைவர் ஹரிஸ் ஃபாரூக்கி வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவமும் என்ற நிலையில் துப்ரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனின் கைதும் நடைபெற்று இருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த […]

You May Like