மத்திய அரசு கீழ் இயங்கும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (Housing and Urban Development Corporation – HUDCO) நிறுவனத்தில் தற்போது 79 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிட விவரம்:
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் – 10
உதவி ஜென்ரல் மேனேஜர் – 5
சீனியர் மேனேஜர் – 13
மேனேஜர் – 8
டெபியூட்டி மேனேஜர் – 1
டிரைய்னி அதிகாரி – 42
வயது வரம்பு:
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 45 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு 40 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- சீனியர் மேனேஜர் பதவிக்கு 35 வயது வரையும், மேனேஜர் பதவிக்கு 30 வயது வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டிரைய்னி அதிகாரி பதவிக்கு அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
திட்டப்பிரிவு: சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் பட்டம் (B.E / B.Tech) பெற்றிருக்க வேண்டும்.
நிதிப்பிரிவு: CA / CMA அல்லது MBA / PG டிப்ளமோ (நிதி சார்ந்த) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பிரிவு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) முடித்திருக்க வேண்டும்.
மனிதவள மேம்பாடு (HR): MBA (HR) அல்லது PG டிப்ளமோ (Human Resource Management) முடித்தவர்கள் தகுதியுடையவர்கள்.
தகவல் தொழில்நுட்பம் (IT): கணினி அறிவியல் அல்லது ஐடி துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பொருளாதாரம் / இந்தி: பொருளாதாரம் அல்லது இந்தி துறையில் முதுநிலைப் பட்டம் (Post Graduation) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் – ரூ.80,000 முதல் ரூ.2,20,000
- உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000
- சீனியர் மேனேஜர் ரூ.60,000 முதல் ரூ.1,80,000
- மேனேஜர் பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000
- டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000
- டிரைய்னி அதிகாரி பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000
தேர்வு செய்யப்படும் முறை: டிரைய்னி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதர பதவிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேரடியாக நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் https://hudco.org.in/ என்ற இணையதளத்தில் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, அடையாள சான்றிதழ், அனுபவ சான்றிதழ், முந்தைய வேலைகளில் பெற்ற சம்பள விவரம் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். டிரைய்னி அதிகாரி பதவிக்கு அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.