கடந்த தேர்தலில் வாக்குகள் குறைந்த மாவட்டங்களில் இந்த முறை வாக்குகளை அதிகரிக்க திமுக புது வியூகம் வகுத்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளளார். தொடந்து கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி கரூர் கோவையில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில் அதிமுக, பாஜக, தவெக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் கடந்த தேர்தலில் கோட்டை விட்ட மாவட்டங்களில் வாக்குகளை அதிகரிக்க திமுக புது வியூகம் வகுத்துள்ளது.
அந்த வகையில் அதிமுக பாகம பலமாக உள்ள சேலம் தருமபுரியில் மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தலைமை புது அசைன்மெண்டை கொடுத்துள்ளது. அந்த வகையில் அதிமுக, பாமக, பாஜகவில் இருந்து விலகிய சுமார் 100 பேர் திமுகவில் இணைந்தனர். 2024 மக்களவை தேர்ந்தலிலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயெ இந்து வெற்றி பெற்றதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
Read more: #Flash : ஓரணியில் தமிழ்நாடு.. மக்களிடம் OTP பெற இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி..