வரும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை…! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

school holiday

சேலம் மாநகர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 06.08.2025, புதன்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாநகர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு 06.08.2025, புதன்கிழமை அன்று உள்ளூர் பள்ளி, விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி. கல்லூரிகளுக்கு வருகின்ற 23.08.2025, சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

"விஜய் நினைத்தது நடக்காது.." பாஜக துணைத் தலைவர் குஷ்பு பேட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?

Thu Jul 31 , 2025
"What Vijay thought wouldn't happen.." BJP Vice President Khushbu's interview..! Do you know what he said..?
vijaykhushbubjpally 1753896189

You May Like