கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா காலமானார். 45 வயதான அவருக்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் அவரது தாயார் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. தபோரி சத்யா 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நந்தா லவ் நந்திதாவில் எதிரியாக நடித்தார்.
அதேபோல மேளா என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கியது மட்டுமின்றி, படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். அவர் தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், நடிகர்கள் தேர்வு பணியை தொடங்கிய நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.