NIA | “ஓஹோ அப்படி போகுதா கதை”… வரலட்சுமி விவகாரத்தை வைத்து மிரட்டப்பட்டாரா சரத்குமார்.?

வரலட்சுமிக்கு NIA சம்மன் அனுப்பிய விவகாரத்தை வைத்து பாஜக(BJP) சரத்குமாருக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

நடிகர் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியுடன்(BJP) கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று தமிழக அரசியல் வட்டாரங்களில் வளம் வந்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது . அந்த செய்திகளின்படி தனது மகள் வரலட்சுமி சரத்குமாரை போதைப்பொருள் சர்ச்சையில் இருந்து காப்பாற்றுவதற்காக தான் சரத்குமார் பாஜகவில் இணைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தில் 300 கிலோ போதை பொருட்கள் மற்றும் ஆயுதம் கடத்திய வழக்கில் ஆதி லிங்கம் என்பவர் கடந்த ஆண்டு என்ஐஏ காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் . இவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி முன்னாள் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதிலிங்கம் போதைப் பொருட்கள் மூலம் கிடைத்த பணத்தை சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரைப் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக வரலட்சுமி சரத்குமாருக்கு NIA சம்மன் அனுப்பியது.

அப்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதால் விசாரணைக்கு தற்போது ஆஜராக முடியாது என வரலட்சுமி சரத்குமார் என்ஐஏ அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது இந்த சம்மனை வைத்து சரத்குமாரை பாரதிய ஜனதா கட்சியின் சேர்வதற்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பரவலான பேச்சு அடிபட்டு வருகிறது.

Read More: முதல்வரின் வருகைக்காக பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதா..? விடுமுறையும் அறிவிப்பு..!! கடுப்பான Annamalai..!!

Next Post

Congress | பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! ஆண்டுக்கு ரூ.1 லட்சம்..!! காங்கிரஸ் கட்சியின் 5 முக்கிய வாக்குறுதிகள்..!!

Wed Mar 13 , 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ள நிலையில், தற்போது மகளிருக்கான காங்கிரஸ் கட்சியின் ஐந்து வாக்குறுதிகளை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அறிவித்துள்ளார். 1) ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 2) மத்திய அரசின் புதிய பணி நியமனங்களில் பெண்களுக்கு 50 சதவீதம் […]

You May Like