ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை வெளியிட்ட சவுதி அரேபியா…! இவர்களுக்கு மட்டுமே அனுமதி…!

hajj

ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்: ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 2026 பிப்ரவரி 1 கடைசி நாளாகும். இதையடுத்து ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் ஹஜ் யாதரீகர்கள் குறித்த பதிவுகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதன்படி, அனைத்து யாத்ரீகர்களும் தங்கள் பதிவுக்கான முறைகளை 15.01.2026 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதன் மூலம் தங்களுக்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவை ஒப்பந்தங்களை உறுதி செய்து கடைசிநேர சிரமத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாத்ரீகர்கள் சம்பந்தப்பட்ட ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் பதிவு நிலை, ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் குறித்து சரிபார்த்துக் கொள்ளுமாறும் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

Vignesh

Next Post

UPI பயனர்களுக்கு எச்சரிக்கை..! இதுபோன்று நடந்தால், பணம் அனுப்ப வேண்டாம்..!

Tue Dec 16 , 2025
இந்த அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பும் எந்தச் சேவையையும் உங்கள் மொபைல் மூலம் வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வங்கித் துறை முன்னணியில் உள்ளது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்குகின்றன. கணக்கு தொடங்குவது முதல் பணப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு மற்றும் கடன் சேவைகள் வரை அனைத்தும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. இதனால் வங்கிக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய […]
upi payment to wrong account

You May Like