தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்.. மாணவர்களுக்கு இன்று முதல் அமலுக்கு வந்த திட்டம்…!

Anbil Mahesh School Mask 2025

மாணவர்களின் உடல்நலன் கருதி ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பள்ளிகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். அந்த வகையில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ‘வாட்டர் பெல்’ திட்டத்தை உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம்.

அதன்படி தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: வரலாற்றில் இன்று!. உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!. பின்னணி என்ன?

Vignesh

Next Post

தொடரும் சோகம்!. சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி!. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிகழ்ந்த விபத்து!

Tue Jul 1 , 2025
ஓஹியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓஹியோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையம் அருகே ஆறு பேருடன் செஸ்னா 441 விமானம் மொன்டானாவின் போஸ்மேனு சென்றுக்கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் […]
ohio plane crash 11zon

You May Like