Scholarship: 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை…!

School Money 2025

பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசின், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 2025-26 -ம் நிதி ஆண்டில், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை பெறலாம். இதற்கு https://scholarships.gov.in என்கிற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.

ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு தொழில்நுட்ப முறையில், தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2025. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2025 ஆகும். மேற்கொண்டு விளக்கங்கள், உதவிகளை பெறுவதற்கு கீழ்கண்ட முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அணுகலாம்: மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா , கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் – wclwo.chn-mole@gov.in தொலைபேசி எண்: 044-29530169

Read more: SSC CGL: மொத்தம் 14,582 காலியிடங்கள்…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

Vignesh

Next Post

செம சான்ஸ்!. 4500 காலியிடங்கள்!. மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு!. மாதந்தோறும் ரூ.15000 உதவித்தொகை!. உடனே விண்ணப்பியுங்கள்!.

Wed Jun 11 , 2025
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நாடு முழுவதும் இருந்து 4,500 தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 202 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொள்ளலாம். தொழிற்பயிற்சியாளர்கள் சட்டம், 1961 கீழ் மத்திய அரசின் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பணிக்கான அனுபவத்தை பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் […]
central bank jobs 11zon

You May Like