சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் இரண்டு சகோதரிகள் மீது பள்ளிப் பேருந்து மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் நூர் சிட்டி காலனியில் வசிக்கும் சாக்கு வியாபாரி முகமது ஆரிப். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அனபியா (7) மற்றும் இளைய மகள் ஜன்னத் (4) இருவரும் மில்டன் கல்வி அகாடமியில் படித்தனர். அனபியா 1 ஆம் வகுப்பும், ஜன்னத் எல்கேஜியும் படித்தனர். இரண்டு குழந்தைகளும் வழக்கம் போல் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் பேருந்தை விட்டு கீழே இறங்கி சிறுமிகள் பேருந்தில் முன்பக்கமாக சாலையை கடந்துள்ளார்கள். அதனை கவனிக்காத வேன் ஓட்டுநர் பேருந்தை முன்னோக்கி நகர்த்தினார். இதில் இரண்டு சிறுமிகளும் சக்கரங்களுக்கு அடியில் சிக்கினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
வேன் குழந்தைகள் மீது ஏறி இறங்கியதில் மூத்த சகோதரி அனபியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. இளைய சகோதரி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read more: நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்! பெரும் பரபரப்பு..!



