போக்ஸோ சட்டம் பற்றி பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்!!

போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர் மாணவர்களிடையே இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சிறுவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுபவரகள் மீது பதியப்படும் சட்டத்தை போக்ஸோ சட்டம் என்று வரையறுக்கப்பட்டுள்ள. இந்த சட்டம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சிறுமியை காதலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சமீப காலங்களில் பாலியல் வழக்குகள் அதிகரித்து இருப்பதால் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும்  போக்ஸோ சட்டம் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு அம்மாநில பெங்களூரு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

Next Post

சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் அரை நிர்வாணமாக ஓடவிட்டு ராகிங்!! வைரலாகும் வீடியோ!!

Tue Nov 8 , 2022
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியான சி.எம்.சி.-யில் அரை நிர்வாணமாக மாணவர்கள் ராகிங் செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் படிக்கும் மூத்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் ராகிங் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் மாணவர்கள் அரை நிர்வாணத்தில்நடப்பதும், ஓடுவதும் ஒரு சில மாணவர்கள் மீது எதோ பொருட்களை கொண்டு […]

You May Like