fbpx

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது. குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக போலியோ சொட்டு …

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

அந்த வகையில், வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மார்ச் …

பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப் போவதாக தகவல் வெளியாவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ”பாஜக இன்று வரை எனக்கு ஒரு பொறுப்பு …

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார். அதில், ”கடந்த தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முன் …

RIP: 2017ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ரிங்கி சக்மா மார்பக புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

ரிங்கி சக்மா 2017 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றிருந்தார். இவருக்கு தற்போது வயது 25. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்தார். 2022 ஆம் ஆண்டில், அவருக்கு வீரியம் மிக்க …

Annamalai: உதயநிதி அவருடைய தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்தவர். மோடியின் கால் நகத்தில் உள்ள அழுக்குக்கூட உதயநிதி சமம் இல்லை என்று அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சுமார் 18 ஆயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் …

சீன ராக்கெட் உடன் திமுக அமைச்சர் விளம்பரம் வெளியிட்டதை கிண்டல் செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் தமிழக பா.ஜ.க. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

கடந்த பிப்.28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக திமுக அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் …

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை கட்சியின் பழைய சின்னமான பம்பரத்தில் போட்டியிட வேண்டும் என்று மதிமுக முடிவெடுத்துள்ளது.

இதற்கு திமுக …

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட …

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என …