Seeman | சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடா..? வழக்கை இன்று அவசரமாக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படவில்லை. இந்த முறை கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சீமான் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும், அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, சீமானின் கரும்பு விவசாயி சின்னத்தை டிசம்பர் 17ஆம் தேதி அன்று கர்நாடகாவைத் சேர்ந்த பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது. அந்த கட்சி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் தங்களுடன் கூட்டணி அமைத்தால் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தயார் என பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி கூறியது.

இது ஒருபுறம் எனில், டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்க தொடங்கிய நிலையில், வழக்கில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் இந்த வழக்கை வரும் 26ஆம் தேதிக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 15ஆம் தேதி தெரிவித்திருந்தது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27ஆம் தேதி என்பதால் அது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு சிக்கலாக மாறியது. ஏனெனில், மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதாலும், வரும் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதை குறிப்பிட்டு வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அவசர வழக்காக இன்று (நேற்று) அல்லது நாளைக்குள் (இன்று) வழக்கை விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Read More : Electric Scooter | வாகன ஓட்டிகளே..!! ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிரடியாக உயருகிறது..!!

Chella

Next Post

Gold loan: விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… இனி கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.4,500 கடன் பெறலாம்!

Mon Mar 18 , 2024
Gold loan: கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக்கடன் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இவ்வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு மற்ற வங்கிகளை விட குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். இதைப்போலவே மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் […]

You May Like