Gold loan: விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… இனி கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.4,500 கடன் பெறலாம்!

Gold loan: கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக்கடன் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இவ்வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு மற்ற வங்கிகளை விட குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். இதைப்போலவே மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.4,200/- கடனாக நகை அடமானத்தின் போது இதுவரை வழங்கப்பட்டு வந்தது.மற்ற வங்கிகளிலும், சங்கங்களிலும், 3,800 – 4,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கிராம் தங்கம் விலை, 6,115 ரூபாயாக உள்ளது. தற்போது தங்க நகைகளின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் கூட்டுறவு துறை நகை கடன் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் படி., ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.4,500/- கூட்டுறவு வங்கிகளில் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இது கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

Readmore: சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடா..? வழக்கை இன்று அவசரமாக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

Kokila

Next Post

Tasmac | தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Mon Mar 18 , 2024
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் ஏப்ரல் […]

You May Like