வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. அதன்பின்னர் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியில் இணைந்த கையோடு தற்போது முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் வேகத்துடன் செங்கோட்டையன் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே கே செல்வம் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கே.கே.செல்வன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபி சட்டமன்ற தொகுதியில் செங்கோட்டையனுக்கு பதில் கே.கே.செல்வம் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து சமீபத்தில் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரது அண்ணன் மகன் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தவெக பொதுக்கூட்டம்: கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்த நபரால் பரபரப்பு..!



