அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. மேலும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இணைக்கும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது..
இந்த சூழலில் திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.. காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்புக்கு பின்னர் இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது..
இதையடுத்து இன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கினார்.. இதன் மூலம் அவர் தவெகவில் இணைய உள்ளது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது..
ஆனால் திமுக உடனும் கடந்த 3 மாதங்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.. இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த போது, சபாநாயகர் அறையில் அமைச்சர் சேகர் பாபு இருந்ததாக கூறப்படுகிறது.. அப்போது சேகர் பாபுவும் செங்கோட்டையனும் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது..
எனவே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தவெக உடன் இணையப் போகிறாரா? அல்லது திமுகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.. திமுக என்பது பலமான கட்சியாக உள்ளது.. ஆனால் தவெக என்பது அரசியல்படுத்தப்படாதா கட்சி என்ற விமர்சனமும் உள்ளது.. தவெகவில் இணைவாரா? அல்லது திமுகவில் இணைவாரா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் செங்கோட்டையனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில் செங்கோட்டையன் ராஜினாமா செய்துள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் விஜய்யின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தவெகவில் இணையும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதுதொடர்பாக விஜய் முக்கிய முடிவெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
Read More : இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பொளந்து கட்டும்.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் அலர்ட்..



